சென்னை: தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ள உத்தரவு: பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததை அடுத்து தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்.
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு