ஐதராபாத்: கொரோனா பாதிப்பால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மார்ச் 31 வரை முடக்கப்படும் என அம்மாநில முதல்வர்கள் அறிவித்ததை அடுத்து, ரேஷன் அட்டை காரர்களுக்கு நிதி அளிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பின் பேரில் நேற்று (மார்ச் 22) நாடு முழுவதும் 'மக்கள் ஊரடங்கு' நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. இதற்கிடையே இந்தியா முழுவதும் கொரோனா பாதித்த 75 மாவட்டங்களை முற்றிலும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்கள் மார்ச் 31 வரை மாநிலம் முழுவதும் முடக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
கொரோனாவால் முடங்கிய மாநிலம்: குடும்பங்களுக்கு நிதி அறிவித்த முதல்வர்கள்