சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

பீஜிங்,: சீனாவில், நேற்று மட்டும், 39 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்திருந்த வைரஸ் பாதிப்பு, மீண்டும் வேகமெடுத்துள்ளதை அடுத்து, தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கட்டுப்பாடுகளை தொடர, அரசு முடிவு செய்துள்ளது.

அண்டை நாடன சீனாவில், கடந்தாண்டு டிசம்பரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுதும் வேகமாக பரவி, உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கடும் கட்டுப்பாடு

சீனாவில், 3,331 பேர், வைரஸ் தாக்குதலுக்கு பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வூஹான் நகரில் பரவிய கொரோனா, மெல்ல மெல்ல, சீனாவின் மற்ற நகரங்களுக்கும் பரவியது. இதையடுத்து, சீன அரசு, கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன.